Thursday, August 7, 2008

தாங்க முடியலையடா சாமி....!!!

மின்னஞ்சலில் வந்தது...!!!

----------------------------------------------------------------

வடி கட்டின கஞ்சத்தனம்

சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.
உடனே சர்தார் தீயணைப்பு நிலையத்துக்கு மிஸ்டு கால் கொடுத்தார். இன்றைய தத்துவம் செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

----------------------------------------------------------------

இன்றைய தத்துவம்

என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும், அதால,
டிகிரி வாங்க முடியாது!!!

----------------------------------------------------------------
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர வழிகள்
நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கனும். அஞ்சு மணியாய்டும். அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்புனா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. டிவி போடுங்க. இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம்.. நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

----------------------------------------------------------------
குங்குமம்

குங்குமம் - இந்த வாரம் சந்தனம் -
அடுத்த வாரம்!!!

----------------------------------------------------------------
மொழி'பெயர்ப்பு'

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...
நாட்டாமை : என்றா பசுபதி?
பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....
நாட்டாமை : அட என்றா??
பசுபதி : அதான் என்றோம்ல!!
நாட்டாமை : ?!?!


----------------------------------------------------------------
டப்பிங் படங்கள் உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns)..
செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)
புதன் : இது ஆவறதில்லை (Mission Impossible)
வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)
வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)


----------------------------------------------------------------
சர்தார்

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!

சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.

சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.

----------------------------------------------------------------

சர்வே

தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கீழே.
7.53% - ஆம்.

0% - இல்லை.
92.47% - நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல

----------------------------------------------------------------
சர்தார்

கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
சர்தார் : ஒன்னும் பிரச்சனையில்லை.. அவர் வந்த உடனே நான் எழுந்திருச்சிருறேன்.

---

சர்தார் ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?
சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

---

சர்தார்ஜி பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?
கோபு : 1000 ரூபாய்க்கு எது வாங்கினாலும், ஒரு வாட்ச் ஃப்ரீன்னு போர்ட்ல பார்த்துட்டு, அந்த கடையில போய் 1000 ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு வாட்ச் கேட்டாராம்!!!

---
கரப்பான் மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,
"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன. ஏன் தெரியுமா?..................................................................... .............................................



ஏன்னா, அது "HIT" ஸாங்!!!
----------------------------------------------------------------
குறுக்கே ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
நண்பன் : கார் ஓட்டி பாரேன். இன்றைய தத்துவம் 3பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும். விடிய விடிய
டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

------------------------------------------------------------------------------------
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

------------------------------------------------------------------------------------------
சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.
ஆனா,முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.
அதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!
-----------------------------------------------------------------------------------------

Teaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்!
ஆனா,
பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே!!
கொஞ்சம் யோசிங்க!!!
-----------------------------------------------------------------------

ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க..
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

-----------------------------------------------------------------------------------------
ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா
Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?

-------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.
ஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 11 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
தெரிஞ்சுகிட்டியா?

---------------------------------------------------------------------------

சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.

--------------------------------------------------------------------------------

நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!
ஏன் தெரியுமா? சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகும்.


----------------------------------------------------------------
நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.
சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.


-----------------------------------------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்டி எப்டி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ............

----------------------------------------------------------------

தில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
அன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க
காசு இருந்தா கால் பண்ணுங்க
எல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க!

Wednesday, July 9, 2008

குளியல் - 'கன்னி' பதிவு

குளியல்















-

அவன் ஆற்றுக்குச் சென்றான்; குளித்தான்;

அவள் ஆற்றுக்குச் சென்றாள்; குளித்தாள்;

அவர்கள் ஆற்றுக்குச் சென்றனர்; குளித்தனர்;

அவன் ஆற்றுக்குச் சென்றான்; குளித்தான்;

அவள் ஆற்றுக்குச் சென்றாள்; குளிக்கவில்லை; ;)


ஏம்ப்பா...


(யாரோ சொன்னது)

Wednesday, April 30, 2008

வணக்கம்

வணக்கம்.

தங்கள் வருகைக்கு நன்றி.
விரைவில் சந்திப்போம்...!!!